காதலருடன் சேர்ந்து, கணவரைக் கொன்ற மனைவியின் ‘மாஸ்டர் ப்ளான்’ அம்பலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 27, 2018 03:00 PM
TN wife kills husband with the help of her affair, arrested

ராமநாதபுரம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயராம்.  பொன்மணி என்கிற மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் சிங்கன்ராவ் தெருவில் வசித்து வந்த ஜவுளிக்கடை வியாபாரியான இவர் கடந்த இரு நாட்களுக்கு முந்தைய நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்த மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டாதாகவும், மேலும் கொலையாளிகள் அவரது உடலை அவரது வீட்டு வாசலிலேயே போட்டுவிட்டுச் சென்றதாகவும் இறந்து போன ஜெயராமன் மனைவி பொன்மணி அழுதுள்ளார்.

 

சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த, கமுதி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார், கொல்லப்பட்ட ஜெயராமனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் ஜெயராமின் மனைவி பொன்மணி  உள்ளிட்ட பலரிடமும் விசாரிக்கையில் பொன்மணிக்கும், அதே எரியாவை சேர்ந்த அசோக் குமாருக்கும் இடையே தொடர்பு இருப்பதை முதலில் மறுத்த பொன்மணி, பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதனையடுத்து அசோக் குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பொன்மணி-அசோக் குமார் இடையிலான தொடர்புக்கு இடைஞ்சலாக ஜெயராம் இருந்ததால் இவர்கள் இருவரும் சேர்ந்து, சில கூலிப்படைகளின் உதவியுடன் பொன்மணியின் கணவர் ஜெயராமை கொலை செய்திருக்க வேண்டும் என்கிற போலீஸின் சந்தேகத்தின் பேரில் விசாரணை துவங்கியது.


இந்நிலையில், இதுபற்றி வாக்குமூலம் அளித்துள்ள, தச்சு வேலைபார்க்கும் அசோக் குமார்,  தனது வீட்டுக்கு எதிர்வீடான - தாயுடன் வசித்து வந்த பொன்மணி படிக்கும்போதிலிருந்தே தன்னுடன் நட்பாக பழகி வந்ததாகவும், அந்த பழக்கம் பொன்மணி-ஜெயராமன் திருமணத்துக்கு பின்பும் நீடித்ததாகவும், இதை அறிந்த ஜெயராமன் தன்னையும் பொன்மணியையும் கண்டித்ததால் இருவரும் (அசோக் குமார், பொன்மணி) ஆத்திரமடைந்ததாலும், தங்கள் காதலுக்கு ஜெயராமன் இடையூறாக இருந்ததாலும் அவரை கொல்வதென தானும் (அசோக் குமார்), பொன்மணியும் (ஜெயராமனின் மனைவி) இருவரும் திட்டம் தீட்டியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.


இந்த திட்டத்தின்படி, ஜவுளிக்கடையில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய ஜெயராமன், இரவில் உறங்கும்போது, அவரது மனைவி பொன்மணி கதவினை திறந்து வைக்கவும், பொன்மணியை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார் அசோக் குமார். மேலும் ஜெயராமனின் பிடரி, கழுத்து பகுதிகளில் அரிவாளில் வெட்டிய அசோக் குமார், ஜெயராமன் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

 

பொன்மணியோ, தன்னை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தன் கணவரை மர்ம நபர்கள் கொன்றதாக அழுது நடித்துள்ளார். ஆனால் பொன்மணியை போலீசார் விசாரித்ததில் பொன்மணி உண்மையை ஒப்புக்கொண்டதால், தானும் சரணடைந்ததாக அசோக் குமார் கூறியுள்ளார். கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவரை இப்படி நூதனமான முறையில், மனைவியும் கள்ளக்காதலரும் செய்துள்ள திட்டமிட்ட படுகொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #AFFAIR #TAMILNADU #RAMANADAPURAM #CRIME #MURDER #WIFE #HUSBAND #POLICE #INVESTIGATION