‘புடி..புடி அவன’.. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு உயிரை பணையம் வைக்கும் டிராஃபிக் காவலருக்கு நடந்த விபரீதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 26, 2018 11:35 AM
traffic inspector pushing a constable off man\'s bike

டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கட்டளையின் பேரில், வண்டியில் சென்றுகொண்டிருந்தவரை நடுரோட்டில் ஓடிச்சென்று பிடித்த டிராஃபிக் கான்ஸ்டபிள் நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் பைக்கில் வேகமாக வந்துகொண்டிருந்த நபரை பார்த்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர், அந்த நபரை பிடிக்கச் சொல்லி, தனக்கு கீழ பணிபுரியும் டிராஃபிக் கான்ஸ்டபிளுக்கு கட்டளையிட்டுள்ளார். அவரும் நடுரோட்டின் குறுக்காக ஓடி, அந்த வாகன ஓட்டியைப் பிடிக்க, வாகன ஓட்டி வண்டியை இயக்கிக் கொண்டே சென்றதில் கான்ஸ்டபிளும், வாகன ஓட்டியும் ஒரு வேனுக்கு அருகே சென்று சரிந்து விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

 

இதுகுறித்து விசாரித்த ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு பிரிவினரைச் சேர்ந்த மேலதிகாரிகள், பைக்கில் வந்துகொண்டிருந்த நபரை பிடிக்கச் சொல்லி கட்டளையிட்ட டிராஃபிக் இன்ஸ்பெக்டருக்கு விசாரணையும், அவர் சொல்படி கேட்டு, விழுந்து அடிபட்டு தற்போது மருத்துவமனையில் இருக்கும் டிராஃபிக் கான்ஸ்டபிளுக்கு இடைநீக்க உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது. 

Tags : #ACCIDENT #CHENNAI #TAMILNADU #CCTV #TRAFFICPS #VIRAL VIDEOS