கால்வாயில் மூழ்கிய பேருந்து, குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 24, 2018 02:56 PM
people dead including children after bus fell into canal Karnataka

கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து 105 கி.மீ தொலைவில் உள்ள மாண்டியா பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, சாலையில் இருந்து திசைமாறிச் சென்று கால்வாயில் விழுந்து மூழ்கியதில் 5 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. 

 

கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநரால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கமிஷ்ணர் கூறியுள்ளார். அருகில் இருந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். 

 

அம்மாநில முதல்வர் குமாரசாமியும், பொறுப்பு முதல்வர் பரமேஷ்வராவும் மீட்பு பணிகளை காவலர்களின் மூலம் துரிதப்படுத்தியதோடு, இந்த விபத்து குறித்து விசாரிக்கவும் ஆணையிட்டுள்ளனர்.

 

ஏறக்குறைய 35 நபர்கள் பயணித்த இந்த பேருந்து கால்வாயில் விழுந்தவுடன், யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை. அதனால் பேருந்து கால்வாய்க்குள் முழுதாய் மூழ்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூச்சுத் திணறியும், அடிபட்டும் சுமார் 5 குழந்தைகள் உட்பட 25 பேர் இறந்துள்ளனர். மீதமிருப்பவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர்.

Tags : #ACCIDENT #BUS #KARNATAKA #MANDYA #BUSACCIDENT #CANAL #SAD