கர்நாடகா இடைத் தேர்தல்:'பாஜக கோட்டையில் முன்னிலை பெற்றிருக்கும் காங்கிரஸ்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 06, 2018 12:27 PM
Karnataka By-Election:Congress Takes Massive Lead in Ballari

ரெட்டி சகோதரர்கள் கோலோச்சும் தொகுதியாக கருதப்பட்டு வந்த பெல்லாரியில், 2004 முதல் பாஜக தான் வெற்றி பெற்று வந்தது.இந்நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பது பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால்,இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

 

இந்நிலையில் லோக்சபா தொகுதியான பெல்லாரி, பாஜக கோட்டையாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,காங்கிரஸ் பெல்லாரியில் அதிகபட்ச அளவில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.காங்கிரஸின் வி.எஸ்.உகரப்பா, பாஜக-வின் சாந்தாவை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Tags : #BJP #CONGRESS #KARNATAKA #KARNATAKA BY-ELECTION