"தாய்க்கு தனது முதுகையே இருக்கையாக்கிய மகன்"...நெகிழச் செய்யும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 06, 2018 11:15 AM
Man lets his frail mother,sit on his BACK at a hospital lobby

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தனது தாய்க்கு ,அமர இருக்கை இல்லாததால் தனது முதுகையையே இருக்கையாக்கிய மகனின் வீடியோ அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

 

சீனாவின்,நான்சாங் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், அவரது மகனும் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது மூதாட்டி உட்காருவதற்கு எந்த இருக்கையும் அங்கு இல்லை. மேலும் மருத்துவர்கள் வருவதற்கு தாமதமாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர்.

 

அப்போது திடீரென அவரது மகன்  குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ள, அவரது முதுகையே இருக்கை போன்று உபயோகித்துக் கொண்டார்.இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள்,உடனடியாக அந்த மூதாட்டிக்கு சக்கர நாற்காலி வழங்கினார்கள்.இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CHINA #LOCAL DONGHU BUREAU