தாயின் விபரீத ஆசையால்....அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 28, 2018 12:34 PM
Boy dangles from Ferris wheel by head after mom let him ride alone

எல்லா தாய்மாருக்கும் தனது குழந்தைகள் குறித்து பல ஆசைகள் இருக்கும்.ஆனால் சீனாவில் ஒரு தாயின் ஆசையால் அவரது மகன் ஆபத்தில் சிக்கியது மட்டுமல்லாது, 130 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 

சீனாவல் ஜெஜியாங் மாகாணத்தில் தைசூ யுஹான் என்ற பிரபலமான கேளிக்கை பூங்கா செயல்பட்டு வருகிறது. அங்கு பொழுதை கழிப்பதற்காக  கடந்த 24-ம்தேதி தாய் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள ராட்சத ராட்டினத்தை பார்த்த அவர், அதில் தன் மகனை மட்டும் தனியாக ஏற்றி விட்டு, சுற்ற வேண்டும் என்று தனது விபரீத ஆசையை அங்கிருந்த பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

இதை கேட்டு அதிர்ந்த பணியாளர்கள் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை.பின்னர் அவர்களுக்கு 30 யுவான் (ரூ. 316) தருவதாக கூறி அவர்களை சம்மதிக்க வைத்தார்.அதன்பிறகு அந்த சிறுவனை தனியாக ராட்டினத்தில் ஏற்றி சுற்ற விட்டார்கள்.முதலில் அமைதியாக இருந்த சிறுவன்,ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கும்போது பயத்தால்  அதன் கதவை திறந்து  வெளியே வந்துள்ளான். இதை சற்றும் எதிர்பாராத பூங்கா பணியாளர்கள் செய்வதறியாது திகைத்தார்கள்.

 

அப்போது, தடுமாறி கீழே விழும் நிலைக்கு சிறுவன் சென்றான். அதிர்ஷ்டவசமாக அவனது கால்களும் கழுத்தும் ராட்டின கம்பிகளை பிடித்துக் கொண்டதால் 132 அடி உயரத்தில் தொங்கினான் சிறுவன்.இறுதியாக மீட்கப்பட்ட அச்சிறுவன் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் .

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சிறுவனின் தாயார் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து பணம் பெற்றுக்கொண்டு சிறுவனை தனியாக ராட்டினத்தில் ஏற்றிய பணியாளர்களை, அந்த கேளிக்கை பூங்கா நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

Tags : #FERRIS WHEEL #CHINA #MOTHER