வருமானத்தை விட அதிக ‘வரதட்சணை’ கொடுக்கும் மணமகன்கள்..சமாளிக்க புதிய முடிவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 24, 2018 07:16 PM
Dowry paid men to Chinese bride regulated

வடக்கு சீனாவில் உள்ள சில கிராமப்புறங்களில் திருமணம் செய்துகொள்ளும் மணமகன்கள் தான் திருமணம் செய்துகொள்ள போகும் மணப்பெண்ணுக்கு பலமடங்கு வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்கிற சூழல் நிலவி வந்தது.

 

இந்நிலையில் அந்த வரதட்சணைக்கு உச்ச வரம்புகளை நிர்ணயித்து, பெய்ஜிங்கில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை உள்ள பலதரப்பட்ட கிராமங்களில் 3 லட்சத்துக்குள்தான் வரதட்சணை பெற வேண்டும் என்று கிராம நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.


உண்மையில் சீனாவில் நிலவும் மக்கள் தொகைப்படி, அங்கிருக்கும் பெண்களின் எண்ணிக்கையானது ஆண்களை விட குறைவான மடங்கில் உள்ளது. சுமார் 3 கோடி ஆண்கள் உள்ள  நிலையில், பொதுவாகவே ஆண்கள்தான் வரதட்சணை கொடுத்து மணப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நிலை நிலவி வந்தது. 

 

ஏறக்குறைய 30 லட்சம் வரை வரதட்சணை பெறப்படுவதால், சீனாவில் பணிபுரியும் ஆண்களின் சராசரி ஆண்டு வருமானத்தை விடவும் வரதட்சணை அதிகமாக பெறப்படுவதால் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவதால், தவறான வழிகளில் ஆண்கள் ஈடுபடும் குற்றங்களும் பெருகத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHINA #DOWRY #CHINESE #MARRIAGE #BRIDE