பக்கவாதத்தால் பிரிந்து சென்ற மனைவி...தந்தைக்கு தாயக மாறிய சிறுமி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 10, 2018 04:24 PM
6-year-old girl takes care of paralysed father in china

சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு தாயக மாறி கவனித்து வரும் சிறுமியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

 

சீனாவை சேர்ந்த சிறுமி ஜியா ஜியா.இவரின் தந்தை டியன் ஹைசெங்கின் கடந்த  2016-ம் வருடம் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து கழுத்துக்குக் கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல்படாமல் போய்விட்டது. விபத்து நடந்த அடுத்த 2 மாதங்களில் அவரின் மனைவி, கணவரையும் குழந்தையையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு தன் பெற்றோர், குழந்தையுடன் மட்டுமே டியன் வாழ்ந்து வருகிறார். தாய் விட்டுச் சென்ற பிறகு சிறுமிதான் தந்தையைக் கவனித்துக்கொள்கிறார்.

 

தினமும் காலை 6 மணிக்குத் தூங்கி எழும் ஜியா அடுத்த அரை மணி நேரம் தந்தையின் கால், கைகளில் மஸாஜ் செய்கிறார். பிறகு அவருக்குப் பல் துலக்கிவிட்டு, காலை அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். பிறகு தன் வேலைகளைச் சிறுமியே பார்த்துக்கொண்டு பள்ளி புறப்படுகிறார்.

 

ஜியா பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் அவரின் தாத்தா, பாட்டி தந்தை டியனைப் பார்த்துக்கொள்கின்றனர். பள்ளி முடிந்து வந்ததும் சிறுமி தந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து இரவு உணவு முதற்கொண்டு அவருக்கு ஊட்டி விடுகிறார்.

 

ஜியாவும் அவரது தந்தையும் இருக்கும் படத்தை ஹைசெங்கின் சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.உடல்நிலை சரியில்லாத தந்தைக்குத் தாயாக இருந்து பார்த்துக்கொள்ளும் இந்த குட்டி தேவதை  பலரது நெஞ்சங்களை வென்று விட்டார்.

Tags : #CHINA #JIA JIA #PARALYSED FATHER #TIAN HAICHENG