தீபாவளி இரவு பாதுகாப்பு பணி...'காவலர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சென்னை போலீஸ் கமிஷனர்'!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 06, 2018 10:12 AM
Chennai COP A.K.Viswanathan celebrated the Diwali with Chennai Police

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன்,சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தீபாவளி கொண்டாடினார்.இது காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

 

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னையில் காவல்துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் ஏராளமான காவலர்கள் தங்களின் குடும்பங்களோடு தீபாவளியை கொண்டாட இயலாது.

 

இதனிடையே நள்ளிரவில் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்,பணியில் இருந்த காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலும் கோயம்பேடு,பனகல் பூங்கா பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

 

காவல்துறை ஆணையர் விஸ்வநாதனே நேரில் வந்து தீபாவளி வாழ்த்து கூறியது காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும்,புத்துணர்ச்சியாகவும் அமைந்ததாக காவலர்கள் தெரிவித்தார்கள்.

Tags : #TAMILNADUPOLICE #CHENNAI CITY POLICE #POLICE COMMISSIONER #A.K.VISWANATHAN IPS #DIWALI 2018