பைக்கில் பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்... தமிழக அரசு !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 24, 2018 01:48 PM
Helmet is compulsory for people sitting behind in the bike.

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக டிஜிபி டிகே  ராஜேந்திரன் சார்பில்  உறுதியளிக்கப்பட்டது. மோட்டார் வாகன விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதாக  தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே கே ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரனைக்கு வந்தது.இந்த வழக்கு தொடர்பாக 2007ல் அரசு அரசாணை வெளியிட்டதாகக் கூறி, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது... அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.இது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

 

இதையடுத்து, பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர  உத்தரவிட்ட நீதிமன்றம்,  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.