இது நாயா? இல்ல எலியா?:பாவம் ஓனரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 17, 2018 04:03 PM
Man Adopts Dog but It Turns Out To Be A Rat

நாய் என்று நினைத்து எலியினை வளர்த்த விசித்திரமான சம்பவம் சீனாவில் பிரபலமாகி வருகிறது.

 

கடந்த மாதம் நாய் என நினைத்து எலியை வளர்த்த நபர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.அப்போது, அவரது நண்பரின் வீட்டு வாசலில் ஆதரவற்ற நிலையில் கருப்பு நிற நாய்குட்டி போன்ற சிறிய வகை பிராணியை கண்டுள்ளார். இரவு நேரத்தில் சரியான வெளிச்சமில்லாததால், அவர் அதை நாய் என நினைத்து  தூக்கி வந்து வளர்க்க துவங்கியுள்ளார்.

 

நாட்கள் செல்ல செல்ல அவர் கொண்டு வந்த உயிரினத்தின் உடலில் எந்த விதமான முடியும் வளரவில்லை. அதே சமயம் அது நாயைப் போலும் நடந்து கொள்ளாததால், அவருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு தனது பிளாக்ஸ்பாட்டில் நெட்டிசன்களிடம் கருத்து கேட்கத் தொடங்கினார்.

 

உடனே  இதுகுறித்த தேடலில் இறங்கினார்கள் நெட்டிசன்கள். அப்போது தான் தெரிந்தது இது நாயல்ல மூங்கில் எலியென்று. தெற்கு சீனாவில் பரவிக்காணப்படும் இந்த மூங்கில் எலி, மூங்கிலை மட்டும் சாப்பிடும்.

மேலும்  அந்த நபர் இந்த மூங்கில் எலியை எப்படி வளர்ப்பது என்று தெரியாததால், இதனை காட்டில் விட்டு விட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags : #ADORABLE DOG #RAT #CHINA