துக்கவீட்டு கறிவிருந்தில் கிடாவெட்டுபவர் கழுத்துக்கே பாய்ந்த கத்தி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 01, 2018 03:43 PM
Man kills himself while trying to slice goat meat at a funeral

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருகே, இறந்துவிட்ட ஒருவரின் 16-ம் நாள் சடங்கு நிகழ்ந்தது. இதில் துக்கத்தில் இருந்து அனைவரும் மீளும் வகையில், கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த இழப்பு குடும்பத்தின் உறவினரும், ஊர்க்காரருமான 46 வயது மதிக்கத்தக்க பெரியசாமி என்பவர் ஆட்டை அறுக்கும் கத்தியைக் கொண்டு அறுக்க முயற்சித்துள்ளார். 

 

ஆனால் அவரது கால்கள் தவறியதால், அந்த கத்தி அவரது கழுத்தில் பாய்ந்து பலியாகினார். ஏற்கனவே இறந்து போன ஒருவரது இறப்பு காரியத்தின் இறுதி நாளன்று அதே குடும்ப வட்டாரத்தைச் சேர்ந்த இன்னொருவர் அகால மரணம் அடைந்துள்ளது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #ACCIDENT #PERAMBALURE #KIDAVETTU #KARIVIRUNTHU #SAD #DEAD