விமானத்தின் இறக்கையில் சண்டைக்காட்சி..கைநழுவி விபத்தில் இறந்த பாடகர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 24, 2018 03:23 PM
Canadian Rapper Jon James died after falling from airplane wing

கனடாவின் மிக முக்கியமான ராப் பாடகரான ஜோன் ஜேம்ஸ் தனது பாடலுக்காக நிகழ்ந்த சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது அத்தனை உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து தவறி வழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

36 வயதான ஜோன் ஜேம்ஸ் ராப் வகை பாடல்களை பாடிக்கொண்டிருந்தவர். அவருக்கு கனடாவில் நிறைய ரசிகர், ரசிகையர்களும் இருக்கின்றனர். இவர் விமானம் ஒன்றில் சண்டைக்காட்சி ஒன்றை படம் பிடித்துக்கொண்டிருக்கும்போது, மெதுவாக நடந்து சென்று விமானத்தின் இறக்கைக்கு அருகில் இருக்கும் கம்பியை படித்தபடி நடிக்க, திடீரென பேலன்ஸ் தவறி விழுந்தார்.

 

கீழே விழும்போது உடனடியாக தன்னுடைய பாராஷூட்டை இயக்கவும் அவரால் முடியாததால் கீழே விழுந்து அடிபட்டு , அந்த இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதை அடுத்து பலரும் இவருடைய பாடல்களையும் கடைசியாக அவர் பேசியதையும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #JON JAMES MCMURRAY #GONEWRONG #DIED #ACCIDENT #AIRPLANE #RAPPER #MUSICSIAN