சிலந்தியை கொல்ல முயன்று வீட்டுக்கு தீ வைத்த விநோத இளைஞர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 25, 2018 06:08 PM
Man Sets House on Fire When he tries to Kill Black Widow Spiders

எதையோச் செய்யப் போய் எதுவோ ஆன காரியத்துக்கு நம்மூரில் நிறைய பழமொழிகள் உள்ளன. அப்படித்தான் கலிபோர்னியாவில் சிலந்தியைக் கொல்ல முயற்சி செய்து தன் வீட்டையே பற்ற வைத்து 10 ஆயிரம் டாலர் நஷ்டமடைந்த இளைஞர் செய்த காரியம் பரவலாகி வருகிறது. 

 

கலிபோர்னியாவில் ப்ரெஸ்னோ என்கிற இடத்தின் அருகே உள்ள லேக் வியூ பாய்ண்ட்டுக்கு நெருக்கமான இடத்தில் தன்னுடைய பெற்றோர்களுக்காக ஒரு குடிலை தயார் செய்துகொண்டிருந்த 23 வயது இளைஞர் பிறகுதான் கவனித்துள்ளார் வீட்டுக்குள் நிறைய கருப்பு சிலந்திகள். விடோ வகை சிலந்திகள் என்று சொல்லப்படும் இந்த சிலந்தி பூச்சிகளை கொல்ல வழியில்லாத அந்த இளைஞர் தீப்பந்து ஒன்று தயார் செய்து சிலந்தியை நெருப்பிலிட்டு கொல்வதற்கு முயற்சித்துள்ளார். 

 

ஆனால் சிலந்தியைக் கொல்வதற்கான சரியான முடிவு இது அல்ல என்று அந்த இளைஞர் உணராததால் உண்டான இந்த விளைவினால் வீட்டினுள் இருக்கும் சில எளிதில் தீப்பிடிக்கும் அபாயமுள்ள பொருட்களின் மீது பட்டு உடனே கிடுகிடுவென வீடு முழுவதும் எரியத் தொடங்கியுள்ளது.

Tags : #FIREACCIDENT #ACCIDENT #SPIDER