விமானத்தில் மது அருந்திவிட்டு ‘இப்படியெல்லாமா பேசனும்’: பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 10:31 PM
woman jailed for six months in the UK for drunken behaviour on Flight

கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெட்-2 விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு மேற்கொண்டு மது அளிக்காததால் விமான ஊழியர்களின் சுயமரியாதையை தரைமட்டமாக்கும் அளவுக்கு திட்டினார்.

 

மேலும், தான் கொண்டுவந்த மதுவை குடிக்க முயன்றதையும் விமான ஊழியர்கள் தடுத்ததால், அந்த விமானத்தில் இருந்த பயணிகளின் காதுபட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை திட்டினார். இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

 

இந்நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், விமான ஊழியர்களின் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ‘நாமெல்லாம் சாகப்போகிறோம்’ என்று சொல்லி பிற பயணிகளையும் உளவியல் ரீதியலான அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்மணியின் தகாத பேச்சு கண்டித்தக்கது என கூறியுள்ளார். 

 

எனவே குற்றம் சாட்டப்பட்ட 41 வயது பெண்மணிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு, இதுபோன்ற கடுமையான தண்டனைகளே மற்றவர்களுக்கும் இப்படி நடந்துகொண்டால் என்ன விளைவு உண்டாகும் என புரிய வைக்கும் என்றும் கூறியுள்ளார். 

Tags : #WOMEN #JAILED #DRUNK #AIRPLANE #DETERRENT #BEHAVIOUR