BGM 2019 All Banner

டவுன் பஸ்ஸை தவறவிட்டதுபோல் விமானத்தை பிடித்துவிட ஓடும் பெண்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 21, 2018 06:59 PM
Women tries to chase down flight after she missed video goes viral

விமானத்தைத் தவறவிட்ட பெண் ஒருவர், விட்டுவிட்ட விமானத்தை பிடிக்க, டவுன் பஸ்ஸை பிடிப்பது போல் விமான தளத்தில் விரட்டி ஓடிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

 

இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்திலிருந்து ஜகார்த்தா செல்லும் ‘சிட்டிலிங்க்' விமானத்தை பிடிக்க முயன்ற ஹனா என்கிற இந்த பெண், மூன்று முறை அழைப்புவிடப்பட்ட பிறகும் விமானத்தை சரியான நேரத்தில் அடையமுடியாததால் விமானம் புறப்பட்டுவிட, கடைசி நிமிடத்தில் ஒடிவந்துள்ளார். 

 

இத்தனைக்கும் விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே நுழைவு வாயிலை அடைந்தவர், பாதுகாப்பு பரிசோதனைகளைத் தாண்டி ஓடிவந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வைரலாகியுள்ளன. இறுதியில் விரக்தியுற்ற ஹனாவுக்கு அனைவரும் சமாதானம் கூறி, அடுத்த விமானத்தில் ஏற்றிவிட்டனர். 

 

Tags : #TRENDING #VIRALVIDEO #CLIP #FLIGHT #WOMEN #AIRPLANE