‘இந்திய பொண்ணு தாங்கோ’.. வாள் வீசும் பெண் எம்.பியின் வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 28, 2018 11:12 AM
Women MP participates in fencing lessons video goes viral

இந்திய நாட்டின் பெண்களை வீரமங்கைகள் என்றெல்லாம் இதிகாசங்கள் கூறியுள்ளன. அடுப்பங்கறை முதல் அரசாட்சி வரை அத்தனையையும் பார்த்துள்ள இந்திய பெண்கள் பலரும் இன்னும் பிற பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த எம்.பி’யான சுப்ரியா சுலே என்பவர் பாராமதி லோக் சபா தொகுதிக்குட்ப்பட்ட பகுதியில் வாள் வீச்சு பயிற்சியினை தீவிரமாக மேற்கொண்டு வரும் அரிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஹடாப்சார் அருகே உள்ள ஒரு கல்வி மையத்தில் நிகழ்ந்த மகளிர் பாதுகாப்பு மற்றும் சுய மேம்பாட்டு விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட எம்.பி சுப்ரியா சுலே, தானும் பங்கேற்று நீண்ட நேரம் வாள் வீச்சு பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு பயிற்சியாளருடன் வாள் வீசியபடி சண்டையிட்டார்.

 

முன்னதாக 2011ல் பெண்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் செய்த சில சமூக நல பணிகளுக்காக விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட சுப்ரியா, காங்கிரஸில் இருந்தாலும், தனது சொந்த அமைப்பான ‘ராஷ்டிரபதி யுவதி காங்கிரஸ்’ எனும் இயக்கத்தை தொடங்கி கடந்த சில வருடங்களாகவே அரசியல் முனைப்பு இருக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டி வருகிறார்.

Tags : #INSPIRATION #WOMEN #EMPOWER #VIRAL #VIDEO #SUPRIYASULE