‘நீண்ட நாள் காதல் தோழியை மணந்தேன்’.. சாகச நடிகரின் ‘மகள்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 27, 2018 12:37 PM
Actor\'s daughter marries her Canadian girlfriend goes viral

உலகம் முழுவதும் அறியப்படும் சீன-ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் சுட்டி நடிப்புக்கும், மிடுக்கான - குறும்புத் தனமான - உடல்மொழிக்கும் சொந்தக் காரரான இவரது மகள்தான் எட்டா ஸென் (எ) எட்டா நாக். 

 

19 வயதே ஆன எட்டா நக், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தன் உற்ற தோழியும் 31 வயதுமான பெண் ஒருவரை மணந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர வைத்துள்ளார். எனினும் தன்பாலின சேர்க்கையினால் எட்டா நக், தன் தோழியுடன் 2017-ஆம் ஆண்டு கனடாவுக்கு குடியேறி வசிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

கனடாவைச் சேர்ந்த மீடியா பிரபலமான ஆன்டி அன்டம் என்பவர்தான் எட்டா நக் மணந்துள்ள உயிர் தோழி. 1999-ல் ஜாக்கி சானுடன் திருமணமாகாமல் வாழ்ந்த எலியனுக்கும் ஜாக்கி சானுக்கும் பிறந்த மகள்தான் எட்டா நக். ஆனால் ஜாக்கி சானுக்கும் இந்த மகளுக்கும தற்போது உறவு முறைகள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கை முடிவுகளை பற்றி தனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என சான் தெரிவித்திருந்தார். 

 

மேலும், ‘உண்மையான காதல் எப்போதுமே வெற்றிபெறும். கனவுகளை காதல் நிறைவேற்றும், புரிதலுடன் உருவாகும் காதல்தான் தன்னிரகற்ற உறவு. அது தூய்மையான இதயங்களால் உண்டாகி நிலைத்து நிற்கும். ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பினால் அளக்கப்படும்’ என்றெல்லாம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த திருமணத்தை பற்றி எட்டா நக் பகிர்ந்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There is nothing greater than true love found. With love we've returned. My home is Hong Kong, a beautiful city full of life and passion. Home is where love is. Home is safety and I know too many that do not feel safe within the environment they were given but the new tide is rising. A home is with the family that you can choose and with that we are never alone. Love is undoutbly stronger than blood. Everyone deserves love and not until I felt love can I be sure that understanding, connecting, attention and love in the face of hate can heal the most depraved of hearts Love always wins. Always.. . . . . . . . . #lovewins #gaymarriage #lgbtq #fightforwhatsright #love #iloveyou #teamlove

A post shared by Etta Zen (@ettazen) on

Tags : #JACKIECHAN #VIRAL #MARRIAGE #GIRLFRIEND #LGBT #CHINA #CANADIAN #ETTA NG #ANDI AUTUMN #MS NG #INSTA #INSTAGRAM