‘அறைத் தோழி இப்படியெல்லாம் இருக்கனும்’.. பெண்ணின் அதிரவைக்கும் கண்டிஷன்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 26, 2018 04:13 PM
woman has taken house-sharing expectations to a new level of bizarre

சரியான அறை நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான காரியம். சில வருடங்களுக்கு முன்பு, கோவையின் ஒரு பொறியியல் கல்லூரியில், அறையை சுத்தம் செய்யாத ரூம் மேட்டினை கத்தியால் குத்திய நபரின் கதையெல்லாம் உண்டு.  இந்த நிலையில், பெண்மணி ஒருவர், தனது வீட்டை பகிர்ந்துகொள்ளும் சக-தோழி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற தனது எதிர்பார்ப்பை மிகுந்த கண்டிப்புடன் தனது அறைத் தோழிக்கென பதிவிட்டிருக்கும் தகவல்கள் பேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. 

 

அதன்படி, வாரநாட்களின் அலுவலக நேரத்தில் கட்டாயமாக வீட்டுக்குள் இருத்தல் கூடாது, கதவை சத்தமாக சாத்த கூடாது, மற்றவர்களை தொந்தரவு செய்யும் இணையதள சாட்டிங் மற்றும் செல்போன் பேசிக்கொண்டு சிரிப்பது -இரவு 11 மணிக்கு மேல் ரேடியோ போடுவது போன்றவை அறவே கூடாது,  அதிகம் நேரம் அறையில் இருப்பவர்களுடன் பேசி அவர்களின் நேரத்தை வீணடிக்கவும் கூடாது- அலுவல் ரீதியாக ஓரிரண்டு வார்த்தைகள் பேசி நகரவும் கூடாது, முழு நேர நிரந்தர அலுவல் வேலையில் இருக்க வேண்டும்- அப்போதுதான் வாடகை கொடுக்காததால் இன்னொருவர் பாதிக்கப்படமாட்டார், ஒரு நாளைக்கு 15 முறை பாத்ரூம் சென்று (குளிக்கவோ-உபாதைகளுக்கோ) லயித்திருப்பதோ அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பாத்ரூம் செல்வதோ- அங்கேயே அமர்ந்து செல்போன் நோண்டிக்கொண்டிருப்பதோ கூடாது, பாத்ரூம்  - துணிகள் - வீடு - (சமைத்த உணவு 2 நாட்கள் பாத்திரத்திலேயே இல்லாமல்) பாத்திரங்கள் - சுத்தமாக இருத்தல்/ இருப்பதற்கு ஒத்துழைக்கவும் வேண்டும். காலை 8.30 மணிக்குள் சமைத்தல் கூடாது, வாரத்துக்கு 3 பேர்களை விருந்தினராக அழைத்து வருவதே அதிகம்தான், மது-சிகரெட் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால் கடுகளவு வீட்டில் அமர்ந்து பயன்படுத்துவது நலம், டி.வி, வைஃபை போன்றவற்றுக்கும் சேர்த்து பில் கட்டிவிட்டு அவற்றை பயன்படுத்தாமல் அடுத்தவருக்கு குற்றவுணர்ச்சியைக் கொடுக்கக் கூடாது என அதிரவைக்கும் கண்டிஷன்கள் அப்ளை முறையில் அறைத் தோழிக்கு பேஸ்புக்கில் பதில் அளித்துள்ளார் அந்த பெண்மணி.

 

மேலும் இந்த விஷயங்கள் எல்லாம் இதற்கு முன், தான் சந்தித்த மோசமான தோழிகளால் உண்டான அனுபவங்களால் எடுக்கப்பட்ட விளைவுகளின் முடிவுகள் என்றும் அப்பெண் விளக்கமளித்துள்ளார். 

Tags : #FACEBOOK #HOUSEMATE #VIRAL #CONDITIONSAPPLY #TOLET #SHARING #ROOMMATE