'தளபதி 63' படத்தில் நடிக்கிறேனா?.. பிரபல நடிகை விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 28, 2018 10:59 AM
Actress Rashmika Mandanna talks about Thalapathy 63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தில் தான் நடிக்கவில்லை என, நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

 

'தெறி','மெர்சல்' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

 

இப்படம் அறிவிப்பு வெளியானவுடன் 'கீதா கோவிந்தம்' புகழ் ராஷ்மிகா இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிப்பார் என, இருவரது புகைப்படங்களையும் எடிட் செய்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

 

இதனைப் பார்த்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு ராஷ்மிகா கோரிக்கை வைத்தார். தற்போது நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

இதனால் இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' விஜய்-அட்லீ படக்கூட்டணியில் நான் நடிக்கிறேனா? என பலரும் கேட்டு வருகின்றனர். அதற்கான வாய்ப்பு தற்போது கிடைக்கவில்லை. இருந்தாலும் விரைவில் நான் அவர்களுடன் பணி புரிவேன் என நம்புகிறேன்.உங்களிடமிருந்து எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.  விரைவில் நான் தமிழ் படத்தில் நடிப்பேன். உங்கள அனைவரின் அன்புக்கும் நன்றி,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #VIJAY #THALAPATHY63 #RASHMIKAMANDANNA