#தளபதி63: '10 வருடங்களுக்குப்' பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 14, 2018 06:51 PM
Actor Vivek to Play the comedian in #Thalapathy63

சர்கார் படத்துக்குப்பின் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். விஜய்-அட்லீ 3-வது முறையாக இணையும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது. தெறி, மெர்சல் படங்களுக்குப் பின் மீண்டும் விஜய்யுடன், அட்லீ இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

 

இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ அர்ச்சனா கல்பாத்தி சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

இந்த நிலையில் தளபதி 63 படத்தில் நடிகர் விவேக்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக குஷி, ஷாஜகான்,பத்ரி,பிரியமானவளே, யூத், தமிழன் மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

 

கடைசியாக 2008-ம் ஆண்டு வெளியான 'குருவி' படத்தில் விஜய்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #VIJAY #ATLEE #VIVEK