முதல்வன் 2-வில் 'தளபதி விஜய்' நடிப்பாரா?.. பிரமாண்ட இயக்குநரின் பதில் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 24, 2018 07:29 PM
Shankar reveals if he will do Mudhalvan 2 with Thalapathy Vijay?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கவுள்ளார்.இதைத் தொடர்ந்து தளபதி 64 படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.(மணிரத்னம்-விஜய் படம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்பதை ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்)

 

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் நமக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டியில் முதல்வன் 2 படம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து நாம் அவரிடம் கேட்டபோது,'' அந்தந்த காலக்கட்டத்தில் என்னைச்சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அது ஒரு கதையாக பார்மாகி என்னைத் தொந்தரவு செய்யும் பட்சத்தில் படமாக எடுப்பேன். அது ஒரு சோஷியல் படமாக இருக்கலாம் இல்லை அரசியல் படமாக இருக்கலாம்.

 

அந்தக் கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு அந்தப்படத்தை இயக்குவேன். அது ரஜினி சாரை டிமாண்ட் பண்ணா ரஜினி சாரை வச்சு எடுப்பேன். கமல் சாரை டிமாண்ட் பண்ணா கமல் சாரை வச்சு எடுப்பேன். விஜய்ய டிமாண்ட் பண்ணா விஜய்ய வச்சு எடுப்பேன். கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு எடுப்பேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

1999-ம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த முதல்வன் படக்கதையை ஷங்கர் முதலில் விஜய்,ரஜினி  இருவரிடமும் சொல்லி இருவரும் தயங்கியதால் அர்ஜுன் அப்படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIJAY #BEHINDWOODSEXCLUSIVE #SHANKAR #MUDHALVAN2