‘பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொன்றேன்’: தாயின் பதறவைக்கும் வாக்குமூலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 29, 2018 02:39 PM
Shocking - TN women reveals that she killed her baby in a brutal way

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சத்யராஜ் என்பவருக்கும், அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட 23 வயதான மனைவி செலஸ்டினுக்கும் ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண்குழந்தை இருந்தபோது, அண்மையில் பிறந்த இரண்டாவது குழந்தை பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்து விட்டதாக குழந்தையின் தாய் செலஸ்டின் கூறியது பலரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 

மிக அண்மையில் நிகழ்ந்த இந்த துயரத்தால் குடும்பமே வாடிக்கிடந்தபோதுதான், தற்போது பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குழந்தை பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறக்கவில்லை என்றும், குழந்தையின் பின்தலையில் பலமாக அடிபட்டுள்ளதாகவும் அறிக்கை வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தாய் செலஸ்டின் உள்ளிட்ட அனைவரையும் விசாரித்தனர்.  அப்போது தன் பச்சிளம் குழந்தையை தலையில் அடித்து கொன்றதை, குழந்தையின் தாய் செலஸ்டின்  ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து செலஸ்டின் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, வேளச்சேரியில் கட்டட வேலைக்கு சென்ற தன் கணவர் சத்யராஜ்க்கு ஜெயந்தி என்கிற பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும், இதை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிய செய்தியை தாமதமாகவே அறிந்ததாகவும் இதனால் தனக்கு வாழ்க்கையில் மிகுந்த வெறுப்பு உண்டானதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த வெறுப்புடனும் வெறுமையான வறுமையுடனும் ஒன்றரை வயது குழந்தையை ஆளாக்க முடியாமல் தவித்துள்ள செலஸ்டின், தற்போது பிறந்த குழந்தை வளர்ந்து கஷ்டப்படுவதை விரும்பாமல், அக்குழந்தையை கொல்ல முடிவு செய்து, மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையின் காலைப்பிடித்து மண்டையில் தரையில் ஓங்கி அடித்ததாகச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

 

பின்னர் பாலூட்டும்போது குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக அழுது நாடகமாடியுள்ள செலஸ்டின், கல் நெஞ்சத்துடன் தான் செய்த வெறிச்செயலை ஒப்புக்கொண்டதை  அடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : #MOTHER #MURDER #KILLS #NEWBORN #BORNBABY #CELESTIN #CHENNAI #TN #BRUTAL #BIZARRE