இளைஞனை லத்தியால் சரமாரியாக தாக்கும் கட்சி பிரதிநிதி; அமைதியாக நிற்கும் போலீஸ்.?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 02, 2018 12:53 PM
Man brutally caning a person in public as police remains a silent

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற பிரதிநிதி ஒருவர், போலீஸ்காரர்களின் முன்பாகவே நபர் ஒருவரை, போலீஸின் லத்தியை வாங்கி, சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற பிரதிநிதி சவுரவ் ஜா என்பவர், விகாஸ் என்பவரை அவரது வீடு தேடிச் சென்று போலீஸ்காரர்களின் லத்தியினை வாங்கி கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சுற்றி இருக்கும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக நின்றதால், அவர்களை பலரும் விமர்சித்துவருகின்றனர். 

 

அதே சமயம், சவுரவ் ஜா-வின் கருத்துப்படி, ‘விகாஸ் மற்றும் அவரது சகோதரர் இருவரும் எண்ணற்ற பாலியல் குற்றங்களைச் செய்ததாகவும், 25 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அவர்களை காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாக சவுரவ் ஜா கேட்டதாக விகாஸ் மற்றும் அவரது பெற்றோர்கள் பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாலும் கோபப்பட்ட சவுரவ் ஜா, தான் அவ்வாறு லஞ்சம் கேட்கவில்லை என்பதை நிரூபிக்கவே அடித்ததாகக் கூறியுள்ளார்.’ 

 

எனினும் விகாஸ்  மற்றும் அவரது சகோதரர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை இந்த செயல் நிரூபித்ததால், அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக விகாஸின் தந்தையை சவுரவ் ஜா அடித்ததால், அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும், விகாஸின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  இந்த உண்மைகளை போலீசார் விசாரித்து வரும் வேளையில், சவுரவ், விகாஸை போட்டு சரமாரியாக லத்தியால் அடிக்கும் வீடியோ இணையத்தில் கிடுகிடுவென பரவி வருகிறது. 

Tags : #SEXUALABUSE #DELHI #AAP #VIRAL #VIDEO #CRIME #POLICE