சொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு சிறுவனின் பிறந்தநாள் கடிதம்.. போஸ்ட்மேனின் உருக்கமான பதில் கடிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 30, 2018 05:14 PM
little boy writes letter to his heaven dad,postman reply goes viral

தந்தையை இழந்த சிறுவன் ஒருவன், தன் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லி எழுதிய கடிதத்தின் மீது, அதனை சொர்க்கத்தில் இருக்கும் தன் தந்தையிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டுமாறு, சிறுவன் போஸ்ட் மேனுக்கு எழுதியுள்ள குறிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

 

ஜேஸ் எனும் பெயருடைய 7 வயது சிறுவன், தன் தந்தை ஜேம்ஸை, 4 வருடங்களுக்கு முன்பு (2014) அவரது 28-வது வயதில் இழந்துள்ளான். எனினும் அந்த சிறுவனும் அவனது சகோதரியும் தங்கள் தந்தையை நினைத்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.  இந்த நிலையில் இவ்வருடம் தன் தந்தையின் பிறந்த நாளுக்கு அவருக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் எழுதியுள்ள குட்டி பையன் ஜேஸ், அந்த கடிதத்தின் உறை மீது, ‘போஸ்ட்மேன்,  இத சொர்க்கத்துல இருக்குற எங்க அப்பாக்கிட்ட சேத்துடுங்க ப்ளீஸ்?’ என்று எழுதியுள்ளான். இதை பார்த்த பலரும் நெகிழ்ந்துபோயுள்ளனர்.

 

இதற்கு பதில் அனுப்பிய ராயல் மெயில் என்கிற அந்த போஸ்ட் நிறுவனம்,  ‘டியர் ஜேஸ், உங்களுடைய கடிதத்தை நாங்கள் சென்று சேர்ப்பது சிரமம்தான். ஏனென்றால் பால்வழி அண்டத்தை தாண்டி சொர்க்கத்துக்கு எடுத்துச் சென்று உங்கள் அப்பாவிடம் சேர்க்க வேண்டும். ஆனாலும், எங்களுக்கு கஸ்டமர்தான் எல்லாமே. உங்களுடைய மெயில் எங்களுக்கு முக்கியமானது. ஆகையால் நாங்கள், உங்களது போஸ்டினை சொர்க்கத்துக்கு சென்று சேர்க்கிறோம்’ என்று கூறியுள்ளது. மேலும் இந்த கடிதங்களை இந்த நிறுவனத்தின் அசிஸ்டன்ட் மேனேஜர் தங்களது அலுவல் ரீதியான பேஸ்புக்கில், பதிவிட்டுள்ளதை அடுத்து, இவை வைரலாகி வருகின்றன.

Tags : #ROYALMAIL #BOY #HEARTMELTING #POST #DAD #VIRAL #LETTER