வைரலாகிய ‘நில்லு நில்லு சேலஞ்ச்’.. எதிர் வீடியோ வெளியிட்ட காவல்துறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 28, 2018 03:40 PM
Kerala Police Releases Awareness Video against Nillu Nillu Challenge

நம்மூரில் சேலஞ்ச்களுக்குத்தான் பஞ்சமா? அவ்வப்போது ஒவ்வொரு சேலஞ்சை கிளப்பிவிட்டு, அதனை வைரலாக்கி உலகறியச் செய்யும் உன்னதமான வேலைகளை பலரும் செய்து வருகின்றனர். 

 

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கீகீ சேலஞ்ச் தொடங்கி, ஆபத்துக்கள் நிறைந்த புளூவேல் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச் வரை நாம் அத்தனையையும் பார்த்துவிட்டோம். இந்த நிலையில்தான் கேரளாவில் TikTok செயலி மூலம் அறிமுகமாகி வைரலாகத் தொடங்கியது நில்லு நில்லு சேலஞ்ச். 

 

இதென்னடா சேலஞ்ச்’க்கு வந்த சோதனை என அதை விசாரித்து பார்த்ததில், ஓடும் பேருந்து அல்லது வாகனங்களை சாலையிலே நிறுத்தி, அவற்றின் முன் நடனமாடுவது தானாம். இந்த சேலஞ்ச்தான் கேரளாவில் இளைஞர்களிடையே பரவி வரும் விபரீத நில்லு நில்லு சேலஞ்ச் என்று அறியப்பட்டது.

 

இந்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கேரள காவல்துறை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவும் வைரலாகியுள்ளது. இவ்வாறு ஆடினால் ஆம்புலன்ஸ் வந்து ஆடிக்கொண்டிருந்தவர்களை அள்ளிக்கொண்டு போக வேண்டி வரும் என்கிற கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

 

Tags : #KERALA #NILLUNILLUCHALLENGE #VIRAL #VIDEO #POLICE #ROADDANCE #TIKTOK