கிரிக்கெட் மட்டுமில்ல டென்னிஸும் நல்லா ஆடுவேன்'.. கலக்கும் 'தல' தோனி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 28, 2018 03:29 PM
Dhoni is playing tennis in ranchi

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய முன்னாள் கேப்டன் தோனி,டென்னிஸ் ஆடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. இதனால், கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிடுவார், உலகக்கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார் என்பது போன்ற பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.இந்நிலையில் இதை பற்றி எதையும் கண்டுகொள்ளாமல்,தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற அவர், அங்குள்ளவர்களுடன் சேர்ந்து டென்னிஸ் ஆடியுள்ளார்.

 

இந்நிலையில் டி20 போட்டிகளில் ரிஷ்ப் பண்ட்டுக்கு விக்கெட் கீப்பிங் பணியை வழங்கி விட்டு, ஒருநாள் போட்டியில் தோனியை தொடர வைக்கும் திட்டத்தை பிசிசிஐ வைத்திருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.