'கைக்கு க்ளோவ்ஸ் இல்ல,தலைக்கு மட்டும் இந்த தொப்பியா'?... இந்திய வீரரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 24, 2018 11:10 AM
Dinesh Karthik takes a catch in a beanie get trolled on Twitter

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணிந்திருந்த தொப்பியை பார்த்த ரசிகர்கள்,அவரை ஜாலியாக ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.

 

ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது.

 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பௌலிங்யை தேர்ந்தெடுத்தார்.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி,19 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.

 

இந்நிலையில் போட்டியின் போது கடுமையான குளிர் நிலவியதோடு சற்று  மழையும் இருந்தது.இதனால் வீரர்கள் விளையாடுவதில் சற்று சிரமம் இருந்தது.இந்நிலையில் அங்கு நிலவிய கடும் குளிரில் இருந்து காத்துக்கொள்ள,பீல்டிங்யில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்,குழந்தைகள் அணியும் வித்தியாசமான தொப்பியை அணிந்து பீல்டிங் செய்தார். இதனை தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.

Tags : #DINESHKARTHIK #CRICKET #BCCI #INDIA VS AUSTRALIA #T20I