'இவங்க இல்லன்னா என்ன'...இந்தியாவால் எங்களை ஜெயிக்க முடியாது:வார்னிங் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 20, 2018 11:29 AM
Glenn McGrath warns team India,predicts series outcome

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாதது வெற்றிடமாக இருந்தாலும்,இந்திய அணியால் எங்களை வீழ்த்த முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவுடன் 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி நாளை பிரிஸ்பேனில் துவங்குகிறது.நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

 

இந்நிலையில் பந்தை சேதப்படுத்தியதர்காக விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் குறையாகவே கருதப்படுகிறது.இருப்பினும் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு மெக்ராத் அளித்துள்ள பேட்டியில் "நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இல்லாதது எங்களுக்கு நிச்சயம் ஒரு குறைதான்.ஆனால் அது எங்களுக்கு பின்னடைவாக இருக்க போவதில்லை.காரணம் அவர்கள் இல்லாத இடத்தை நிரப்புவதற்க்காக இளம் வீரர்கள் நிச்சயம் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.அதனால் இத்தொடரில் பரபரப்பு பஞ்சம் இருக்காது.மேலும் இந்திய அணியினை நிச்சயம் வென்று,தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #CRICKET #VIRATKOHLI #INDIA VS AUSTRALIA #GLENN MCGRATH