எவ்வளவு லாவகமான கேட்ச்.. அதி அற்புதமான மேஜிக்கல் தருணம்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 09:09 AM
Australia Crcket - Peter Nevill\'s Brilliant Catch Goes Viral on air

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், சுழல்பந்து வீச்சாளர் லயன் பந்து வீசும்போது  நிகழ்ந்துள்ள அதி அற்புதமான மேஜிக்கல் தருணம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. 

 

லயன் வீசிய பந்தினை  சார்லி ஹெம்ஃப்ரே, கட் செய்ய முயற்சித்தபோது பந்து  பேட்டின் விளிம்பில் பட்டு, விக்கெட் கீபரிடம் செல்ல, அங்கிருந்த 33 வயது விக்கெட் கீப்பர் நெவில் பந்தை தவறவிடுவதுபோல்விட்டு, சட்டென இலகுவாக பந்தினை பிடித்துவிட்டார். 

 

இந்த அரிதிலும் அரிதான கேட்ச், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் பீட்டர் நெவில் சர்வதேச அணியில் இடம் பெற்று விளையாட முடியாத சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன், தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டு நாட்டுக்குள்ளான விளையாட்டு போட்டிகளில் பட்டையை கிளப்பி வருகிறார். 

Tags : #CRICKET #AUSTRALIA