ஆஸ்திரேலியா புறப்பட்டது 'தல' இல்லாத இந்திய அணி...சவாலை சந்திக்குமா?

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 17, 2018 11:18 AM
Indian Cricket Team departs to Australia for match

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது.

 

கடந்த 2015-16ல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இந்தியா, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்தியா கைப்பற்றியது.மேலும் தற்போது ஆஸ்திரேலியா செல்லும் அணியில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

காபாவில் துவங்கும் முதல் டி20 போட்டியில்  கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ளது. பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படும் என்று கோலி தெரிவித்துள்ளார்.இந்த போட்டிகள் உலகக்கோப்பைகான முன்னோட்டமாக கருதப்படுகிறது.இது நிச்சயம் கேப்டன் கோலிக்கு சவாலாக இருக்கும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாகும்.