'இது வேற லெவல் சிக்ஸ்'...ஸ்விட்ச் ஹிட்டில் பந்தை தெறிக்க விட்ட அதிரடி வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 19, 2018 10:29 AM
AB de Villiers plays a \'switch-hit six video goes viral

ஸ்விட்ச் ஹிட்டில் சிக்ஸர் அடித்த தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டிவில்லியர்ஸ் கடந்த மே மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இருப்பினும் உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

 

ஸான்ஸி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கேப்டவுன் பிளிட்ஸ் அணியில் டிவில்லியர்ஸ் இடம்பெற்றுள்ளார். அந்த அணிக்கும் ஷவானே ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், ஸ்விட்ச் ஹிட் ஷாட் மூலம் பந்தை தெறிக்க விட்ட டிவில்லியர்ஸ் அதை சிக்ஸருக்கு அனுப்பினார்.

 

டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடித்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதற்காகத்தான் டிவில்லியர்ஸை 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கிறோம் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Tags : #CRICKET #AB DE VILLIERS #SWITCH HIT #SOUTH AFRICA