'இது தான் அடி'...இந்தியாவுக்கு தெறிக்க விடும் புதிய ஆல்-ரவுண்டர் கிடச்சாச்சு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 20, 2018 10:29 AM
Jasprit Bumrah fearlessly smacking the ball video goes viral

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் இந்திய அணியில் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் கலக்கி வரும் பும்ராவின் வலை பயிற்சி வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

 

இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 நவம்பர் 21ம் தேதி நடைப்பெற உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அவர்களின் சொந்த மண் என்பதால்,காலநிலை மற்றும் மனதளவில் அவர்களுக்கு அது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.நிச்சயம்  ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதில் இந்திய வீரர்கள் மிக தீவிரமாக உள்ளார்கள்.

 

இந்நிலையில் இந்திய வீரர்கள் தீவிரமாக  வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்,இந்தியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,அதிரடியாக பேட்டிங் செய்யும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.பும்ரா பேட்டிங் செய்யும் போதும் தான் ஒரு பவுலர் என்ற நினைப்பில் தான் செயல்படுவார்.ஆனால்  பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பும்ரா பேட்ஸ்மேன் போன்று அதிரடியாக பேட்டிங் செய்வது,இந்திய அணிக்கு மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

Tags : #CRICKET #BCCI #JASPRIT BUMRAH #INDIA VS AUSTRALIA