'அணியில் இணையும் அதிரடி வீரர்'.. தோல்விப்பாதையில் இருந்து திரும்புமா இந்திய அணி?

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 23, 2018 11:03 AM
Hardik Pandya aims to come back in Australia ODIs

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்பர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடியும் டக்வொர்த் லூயிஸ் முறையில் 4 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இன்று 2வது டி20 போட்டி நடைப்பெற உள்ளது.

 

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹர்திக் பாண்டியா, தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்நிலையில் காயம் அடைந்த 60 நாட்களுக்கு பிறகு உடல் நலம் பெற்று கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஹர்திக் பாண்டியா ''எனது உடல்நிலை தற்போது தேறிவருகிறது.பவுலிங் பயிற்சியை துவக்கியுள்ளேன்.பவுலிங்கில் சரியான லையனில் பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சியா உள்ளது. நான் இடம்பெறாவிட்டாலும் என் சகோதரன் குர்ணால் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடுவது பெருமையாக இருக்கிறது. ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட தயாராகிவருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.