'என்ன ஒரு ஸ்பீடு': ஐசிசி தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறிய...இந்திய பௌலர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 28, 2018 11:19 AM
Kuldeep Yadav enters top 5 of bowlers in ICC T20I Rankings

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட 20 ஓவர்களுக்கான தரவரிசை பட்டியலில்,இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய 20 ஓவர்கள் போட்டியானது நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது.இந்நிலையில் வீரர்களின் திறன் அடிப்படையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிடும்.அதன் அடிப்படையில்,714 புள்ளிகளுடன் 20 இடங்கள் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார் குல்தீப். இதுவே அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது.

 

23 வயதான குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்திய அணியை தொடர் தோல்வியிலிருந்து காப்பாற்றியதில் குல்தீப்யின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

Tags : #CRICKET #BCCI #KULDEEP YADAV #ICC T20I RANKINGS