'கேப்டன் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்'...இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பகிர் குற்றச்சாட்டு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 24, 2018 12:24 PM
Mithali Raj\'s manager hits out at Harmanpreet Kaur

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹா்மன் பிரீத் கவுா் சூழ்ச்சியுடன் செயல்படுவதாக,இந்திய அணியின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜின் மேலாளா் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

மேற்கு இந்திய தீவுகளில்,உலககோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற்றுவருகிறது.பி பிரிவில் இந்தியா, அயலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி,34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியில் கேப்டன் ஹா்மன் பிரீத் கவுா் குறைந்த பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

 

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை எதிா்கொண்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடி வீராங்கனையான மிதாலி ராஜ் 56 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த போட்டியிலும் அயா்லாந்து அணியை இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

 

இவ்வாறு தொடா்ந்து வந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, 3 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா அணியை எதிா்கொண்டு அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் காயம் காரணமாக மிதாலி ராஜ் விளையாடவில்லை.

 

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிா்கொண்டது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அண,19.3 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே சோ்த்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 17.1 ஓவரில் அசத்தலான வெற்றியை பெற்றது.இந்த போட்டியிலும் மிதாலி ராஜ் விளையாடவில்லை.ஆனால் அவர் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில் போட்டியின் முடிவில் மிதாலி ராஜ் களம் இறக்கப்படாதது குறித்து கேப்டன் ஹா்மன் பிரீத் கவுரிடம் கேட்கப்பட்டது அதற்கு அவா் கூறுகையில், “பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை,இந்திய அணி எளிதாக வென்றது.(அப்போது மிதாலி ராஜ் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்.) அதனால் அதே வீரா்களுடன் களம் இறங்க நினைத்ததால் மிதாலி ராஜ் களம் இறக்கப்படவில்லை,என்று தொிவித்தாா்.

 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், மிதாலி ராஜின் மேலாளருமான அனிஷா குப்தா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹா்மன் பிரீத் கவுா் சூழ்ச்சி செய்கிறாா், பொய் கூறுகிறாா், முதிா்ச்சி இன்றி செயல்படுகிறாா். அவருக்கு கேப்டனாக இருக்க தகுதியே இல்லை” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRICKET #BCCI #MITHALI RAJ #HARMANPREET KAUR #ANNISHA GUPTA