'தமிழில் வாழ்த்து சொன்ன குட்டி தல ஜிவா'....வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 26, 2018 10:12 AM
Dhoni\'s daughter Ziva Interaction in Tamil & Bhojpuri video goes viral

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி,தனது மகளுடன் இருக்கும் விடியோவை எப்போதெல்லாம் வெளியிடுகிறாரோ அப்போதெல்லம் அது வைரலாகி விடுகிறது.

 

தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் தோனி இடம் பெறவில்லை.இதனால் தனது நேரத்தை தனது செல்ல மகள் ஜிவாவுடன் செலவழித்து வருகிறார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு,தோனி மற்றும் ஜிவாவின் கேரட் உண்ணும் வீடியோ காட்சியினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே லைக்ஸ்யை அள்ளியது.

 

இந்நிலையில் தோனி வெளியிட்டிருக்கும் மற்றோரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அந்த வீடியோ காட்சியில் தோனியின் மகள் ஜிவா தமிழ் மற்றும் போஜ்புரி மொழிகளில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தமிழில் எப்படி இருக்கிங்க ? என் மகள் ஜிவா கொஞ்சும் தமிழில் கேட்க்க 'நல்லா இருக்கேன்' என தோனி பதில் கூறினார்.இன்ஸ்டாகிராமில் தோனி வெளியிட்ட இந்த வீடியோ காட்சியை தமிழ் ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.

View this post on Instagram

Greetings in two language

A post shared by M S Dhoni (@mahi7781) on

Tags : #MSDHONI #CRICKET #BCCI #ZIVA