தமிழ் மொழி மீதான காதலால் அமெரிக்க பெண் எடுத்த முக்கிய முடிவு.. வைரலாகும் புகைப்படங்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 29, 2018 11:04 AM
Tamil Speaking american Women Marries a Tamil groom photos goes Viral

தமிழ் மீது ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் தமிழ்நாட்டிலேயே குறைந்துகொண்டு வரும் சூழலில், அனைவரையும் சமூக வலைதளங்களில் தங்கிலீஷ் பேசி அசரவைத்த அமெரிக்க பெண் சமந்தா ஜோஸ். 

 

’அய்யா பெரிய நன்றி... வணக்கம் அம்மா’ என்பன போன்ற வார்த்தைகளில் தொடங்கி, தொடர்ச்சியாக, தான் நினைப்பவற்றை தமிழிலேயே ட்வீட் செய்யவும் பதிவிடவும் தொடங்கிய சமந்தா ஜோஸ் அடிப்படையில் சைக்காலஜி படித்தவர். தமிழை விருப்பப்பட்டு யூ டியூப் வாயிலாகவும் நண்பர்கள் மூலமாகவும் கற்றுக்கொண்டு தமிழ்ப் படங்கள் பற்றி பேசவும் செய்தவர். 

 

இந்த நிலையில் அவர் கண்ணன் என்கிற ஒரு தமிழரை மணக்கவுள்ளதாகவும் அவருடன் நிச்சயதார்த்தம் ஆகியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  மேலும் இந்த நிச்சயதார்த்தம் தமிழர் முறையில் தமிழ்நாட்டில் உள்ள கண்ணனது சகோதரியின் வீட்டில், பூ வைக்கும் சடங்கு என்கிற பெயரில் நிகழ்ந்துள்ளது. 

 

முன்னதாக இருவரும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, இடையில் தென்னமலை பகுதி அருகே இருந்த ரயில் தண்டவாளம் ஒன்றில் ரொமாண்டிக்காக நின்றபடி, கண்ணன் மேற்கத்திய முறையில் தன்னிடம் காதலைச் சொன்னதாக பதிவிட்டுள்ள சமந்தா ஜோஸ், நடந்து முடிந்த இந்த நிச்சயதார்த்தத்தில் தமிழ்ப்பெண் போல புடவை, நகைகளுடன் வெட்கப்பட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த ஒளிப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. #மேல்நாட்டு_மருமகள்!

 

Tags : #TAMIL #AMERICANWOMEN #TAMILNADU #VIRAL #THANGLISHTHAMIZHACHI #SAMANTHAJOGOES #SAMANTHARYAN #KANNAN #US #INSTAGRAM #SAMANTHAJOES