‘இவர இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’.. உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 30, 2018 07:12 PM
Virat Kohli bowls during the practice match video goes viral

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள அடுத்த தொடர் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு எதிர்பார்ப்பு கூடிவரும் நிலையில், பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பில் இருக்கும் விராட் கோலி, பந்து வீசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிராக, இந்திய அணி விளையாண்ட 3-ம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களிடம் இந்த பந்துவீச்சாளர்கள் முதலில் சமாளித்து, பின்னர் ஈடுகொடுக்க முடியாமல் இருந்த நேரம், விராட் கோலி களத்தில் இறங்கி அடுத்த சில ஓவர்களுக்கான பந்துகளை வீசத் தொடங்கினார்.


விக்கெட்டுகளை அவர் கைப்பற்றவில்லை என்றாலும், பந்துவீச்சு அவருக்கு புதிது இல்லை என்றாலும், வெகுநாட்களுக்கு பிறகு கோலி பந்து வீசியதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்ததோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு கோலி பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIRATKOHLI #CRICKET #TEST #AUSTRALIA #VIRATBOWLS #TEAMINDIA #VIRAL #VIDEO #BOWLING