'யாரு நெனச்ச இடத்துல தூங்குவாங்க'...வைரலாகும் 'இந்திய வீரர்களின் ராப்பிட்-ஃபையர்' வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 29, 2018 02:04 PM
Indian Cricket players rapid-fire questions video goes viral

இந்திய வீரர்கள் சுவாரசியமாக பதிலளிக்கும் ராப்பிட்-ஃபையர் வீடியோ,தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.தற்போது டெஸ்ட் போட்டிகான பயிற்சியில்  இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.இதனிடையே சிட்னியில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியாவின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், பும்ராஹ், தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் பதிலளிக்கும் ராப்பிட்-ஃபையர் சுற்று அதில் இடம் பெற்றுள்ளது.

 

இதில், இந்த ஐந்து வீரர்களும் அணியில் யார் அதிகம் சாப்பிடுவார்கள், யார் அதிகம் ஷாப்பிங் செய்வார்கள், யார் நினைத்த இடத்தில் தூங்குவார்கள் போன்ற நகைச்சுவையான கேள்விக்கு வீரர்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்கள் கிடைத்துள்ளன.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #BCCI #DINESHKARTHIK #BHUVNESHWAR KUMAR #JASPRIT BUMRAH #RAPID-FIRE QUESTIONS #ROHIT SHARMA