'96' என்னை அப்படியே அடித்துச் சென்று விட்டது.. பிரபல வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 27, 2018 11:01 AM
Dinesh Karthik praises Actor Vijay Sethupathi and 96 movie

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் தன்னை அப்படியே அடித்துச் சென்று விட்டதாக, பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்திருக்கிறார்.

 

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள்,பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இப்படம் தங்களது பள்ளிப்பருவ நினைவுகளை மீட்டெடுத்து விட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். 

 

இந்த நிலையில் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' சமீப காலமாகவே நான் விஜய் சேதுபதியின் ரசிகனாக இருக்கிறேன். 96 என்னை அப்படியே அடித்துச் சென்றுவிட்டது.கோவிந்த் வசந்தாவின்  ’காதலே காதலே' பாடல் தனிச்சிறப்பு. அதை மறுபடியும், மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

 

வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த், பாசு உள்ளிட்டோரும் இப்படத்துக்கு பெரிய ரசிகர்கள் தான்.  என்ன சொல்கிறாய் அஸ்வின்?,'' என, அஸ்வினின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.