'என்னுடைய கடைசி படம் இதுதான்'.. சின்மயி உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 18, 2018 01:22 AM
Singer Chinmayi terminated from the dubbing union

திரிஷா,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96' திரைப்படம் தான் தனது கடைசி படம் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

 

நயன்தாரா, திரிஷா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், எமி ஜாக்சன் என தமிழின் முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்தவர் சின்மயி. சமீபத்தில் வெளியான 96 படத்தில் நடிகை திரிஷாவுக்கு, சின்மயி குரல் கொடுத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 

இந்தநிலையில் தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் என சின்மயி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,'' கடந்த 2 வருடங்களாக டப்பிங் யூனியனுக்கு சந்தா செலுத்தவில்லை எனக்கூறி என்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். எந்தவொரு தகவலும் எனக்கு இதுதொடர்பாக அளிக்கப்படவில்லை. அந்த தொகையைத் திரும்ப செலுத்தினாலும் எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

 

எனினும் இந்த 2 வருடங்களில் எனது சம்பளத்திலிருந்து 10% தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. இதனால் 96 தான் எனது கடைசி படமாக இருக்கப்போகிறது. இது தொடருமானால் தமிழில் ஒரு நல்ல படத்துடன் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே.பை!பை!,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Tags : #VIJAYSETHUPATHI #CHINMAYISRIPAADA #96THEMOVIE #TRISHA