'வலைப்பயிற்சியில்' கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை

Home > News Shots > தமிழ்

By |
INDVSENG:Ganguly criticize Dinesh Karthik\'s batting form

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் வலைப்பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவில்லை என, இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ''காலையில் வலைப்பயிற்சியில் தினேஷ் பேட் செய்த வீடியோ பார்த்தேன். அதில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டில் பந்து படவேயில்லை. அவர் மிகவும் மோசமான பார்மில் இருக்கிறார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும்.

 

ஒரு இடதுகை ஆட்டக்காரர் கண்டிப்பாக அணிக்குத் தேவை.இந்திய அணியின் தோல்விகள்  அவரைப் பாதித்திருக்காது.மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்,'' என தெரிவித்துள்ளார்.