'விராட் தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. பிரபல வீரர் காட்டம்!

Home > News Shots > தமிழ்

By |
Virat Kohli doesn\'t prove anything to anyone says Yuvaraj Singh

இங்கிலாந்து-இந்தியா இடையிலான முதல் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்தது.

 

இந்திய அணியின் 'டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி என பவுலர்களை வைத்துக்கொண்டு 149 ரன்களை விராட் கோலி குவித்தார்.அவரின் இந்த சாதனையை பிரபலங்கள் அவரது ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் இணைந்துள்ளார். அவர் தனது வாழ்த்தில், '' விராட் இனி தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை,'' என தெரிவித்துள்ளார்.