தினேஷ் கார்த்திக்குப் பதிலாக 'அறிமுக வீரரை' களமிறக்கிய இந்தியா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 18, 2018 03:45 PM
INDVSENG: Rishap Pant debuts in 3rd test against England

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுல்-தவான் இருவரும் களமிறங்கவுள்ளனர்.

 

இந்தநிலையில் இன்றைய டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்குப் பதிலாக ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த ரிஷப் பண்டினை இந்திய அணி களமிறக்கியுள்ளது. இது ரிஷாப்பின் அறிமுக டெஸ்ட் போட்டி என்பதால் டெஸ்ட் போட்டியிலும் அவர் ஜொலிப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.இதனால் இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு கடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

இரு அணி வீரர்களின் விவரம்:-

 

இந்தியா: லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், இஷாந்த் சர்மா,மொகம்மது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா.


இங்கிலாந்து: அலெஸ்டர் குக், கே ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஓ போப்பே, ஜெ பேர்ஸ்டோ,பென் ஸ்டோக்ஸ்,ஜோஸ் பட்லர்,சி வோக்ஸ், அடில் ரஷித்,எஸ் பிராட்,ஜெ ஆண்டர்சன்.