'இந்திய வீரர்களின் லஞ்ச்' இதுதான்...வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By |
BCCI shared Team India\'s Lunch menu at Lords in Twitter

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்து வருகிறது.

 

தொடர்ந்து நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி  தனது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது.

 

இந்தநிலையில் பிசிசிஐ இந்திய வீரர்களின் லஞ்ச் இதுதான் என மெனு பட்டியல் ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இறால், உருளைக்கிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ்கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன.

 

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு சாப்பிட்டு விட்டு அவர்களால் எப்படி விளையாட முடியும்? என ட்விட்டரில் தொடர்ந்து இந்திய அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.