'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்'.. தலைவரைப் புகழ்ந்த சிங்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 29, 2018 01:33 PM
There is only one Superstar, says Suriya

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினி சார் தான் என, நடிகர் சூர்யா 2.O படத்துக்கான வாழ்த்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மிகப்பெரும் பொருட்செலவில் இன்று வெளியான 2.O திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினி, அக்ஷய்,எமி ஜாக்சன்,ஷங்கர், ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் என நடிகர் சூர்யா தலைவர் ரஜினியைப் பாராட்டி இருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், '' ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். எனக்கு அது ரஜினி தான். நான் எப்போதும் ஷங்கர் அவர்களின் பார்வையைக் கண்டு பிரமித்துள்ளேன். சினிமாவின் சக்தியை நம்ப வைத்து விடுவார்.லைக்கா நிறுவனம் படத்துக்கு செய்துள்ள இமாலய முயற்சிகளை நம்ப முடியவில்லை.

 

படத்தின் இசை நமது காதுகளுக்கு விருந்தாக இருக்கும். அக்ஷய் குமாருக்கு மிகப்பெரிய வரவேற்பு. தமிழில் அவரைப் பார்ப்பது நன்றாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.