சூப்பர் ஸ்டார் நன்றாகவே இருக்கிறார்.. வதந்திகளை பரப்பாதீர்கள்: புதிய ட்வீட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 07:00 PM
Rajini Sir is healthy & doing well, There are rumours being spread

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போதே ’பேட்ட’ படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். அடுத்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 2.0 திரைப்படமும் ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில்,  நாடே அறிந்த அவரது சுறுசுறுப்பு பற்றி சொல்லவே வேண்டாம். 

 

இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வதந்திகளாக யார்யாரோ பரப்பி வருவதால், பலரும் அவற்றை நம்பியுள்ளனர். 

 

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹமது தனது ட்விட்டர் பக்கத்தில், ”தலைவர்- சூப்பர்ஸ்டார் - ரஜினிகாந்த்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பன போன்று அவரது உடல்நலம் குறித்த சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சிறிதும் உண்மையற்ற இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். ரஜினிகாந்த் அவர்கள் நலமாக உள்ளார். ஆக இதுபோன்ற தகவல்களை பரப்புவதை யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags : #RAJINIKANTH #RIAZTHEBOSS #RIAZKAHMED #SUPERSTAR #THALAIVAR #HEALTH #RUMOURS