குளிர்பானம் மட்டுமே குடித்து வளர்ந்ததால் பேச்சு, பற்கள் இழந்த மகன்கள்.. தந்தை கைது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 25, 2018 06:47 PM
Father Arrested For Feeding Only Coke for his 2 Sons in France

பிரான்சில் தந்தை ஒருவர், சிறிய வயதுடைய தனது இரு மகன்களுக்கும் கோகோ-கோலா குளிர்பானம் மட்டுமே பல வருடங்களாக உணவாக கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

உண்ணுவதற்கு உணவு, உணவுப்பொருட்களை வைப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி என எதையுமே வீட்டில் வைத்திராத அந்த தந்தை, தனக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை சேமிக்கும் நோக்கில், தனது மகன்களுக்கு பல வருடங்களாகவே வெறும் கேக் மற்றும் கோக் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். மர்மமான அவரது நடவடிக்கை கண்டு அண்டை வீட்டார் இதனை போலீஸில் தகவல் அளித்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பாக்கெட்டில் நுரை ததும்ப அடைத்து வைக்கப்படும் இந்த குளிர்பானங்கள் யாவும்,  வாயு, இருதயத் தொல்லை, குடல்புண் என பல வகை நோய்களுக்கு வித்திடும் என்கிற உண்மை ஒருபுறமிருக்க பல வருடங்களாகவே இதுபோன்று உட்கொண்டிருந்த இந்த மகன்கள் இருவரில் ஒருவருக்கு பற்கள் முழுவதுமாக பாதிக்கப்படவும், மற்றொரு சிறுவனுக்கு பேச்சு வராமலும் போயிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

Tags : #COOLDRINK #FATHER #SONS #HEALTH #FRANCE