'புதுசு, புதுசா அவுட் ஆகுறாரு'.. பிரபல வீரரைக் காய்ச்சி எடுத்த பயிற்சியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 29, 2018 06:41 PM
#INDVSAUS: Sanjay Banger slams KL Rahul for reckless shoot selection

அவுட் ஆவதில் புதுப்புது வழிகளைக் கண்டறிகிறார் என, கே.எல்.ராகுலை  இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

 

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வருகின்ற 6-ம் தேதி அடிலெய்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

 

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுல் பார்மின்றி அணியில் தவித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து சஞ்சய் பாங்கர் கூறுகையில்,''அவர் நல்ல நிலையில்தான் உள்ளார். அவுட் ஆவதற்கு புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து கொள்கிறார் என்பதுதான் பிரச்சினை. ஒரு இன்னிங்ஸ்தான் அவர் பார்முக்கு வரத் தேவை. அவரது திறமை என்னவென்பது எங்களுக்கு தெரியும். அவர் நன்றாக ஆடுவது அணிக்கு பெரிய பலம்.

 

அவர் இன்னமும் இளம் வீரர் அல்ல. 30 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார். எனவே அவருக்குப் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்புடன் அவர் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தொடக்க வீரர் மற்றும் 6-வது வீரர் யார்? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை,'' என தெரிவித்திருக்கிறார்.